இதனையடுத்து தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ராஜூ, ஆசிரியர் சீதாராமனிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதில், அவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதனையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் சீதாராமன் பள்ளி வேலை நேரத்தில் செல்போனில் பேசிக் கொண்டும், மடிக்கணினி பார்த்துக் கொண்டும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதே இல்லை எனவும் சமீபத்தில் புகார் கடிதம் பெறப்பட்டது. விசாரித்ததில், அரசியல் சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு குடிமுறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955, விதி 17(பி)யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
The post அதிமுக கட்சி பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை appeared first on Dinakaran.