ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!!

சென்னை: ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதியோர் உதவித்தொகை உயர்வின் மூலம் அரசுக்கு ரூ.845 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: