இந்த அரசுக்கு ஒரு முட்டுக்கட்டை போட வேண்டும், வில்லங்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு வகையில் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக போட்டியிடவும் ஆசை உள்ளது. அதே சமயம் தமிழக காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்கவும் பேராசை உள்ளது.
10 ஆண்டுகளாக பாஜவோடு கூட்டணியில் இருந்து விட்டு சில காலங்களாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கூறுவதால் மட்டும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடாது. சிறுபான்மையினர் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர். காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்களுக்குத்தான் சிறுபான்மையினரின் வாக்குக்கள் கிடைக்கும். அமலாக்கத்துறையை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
The post காங்கிரஸ் எம்பியாக ஆசை… தலைவராக பேராசை…கார்த்தி சிதம்பரம் ‘ஓபன் டாக்’ appeared first on Dinakaran.