டெல்லி: டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். டெல்லி எல்லையில் 21 வயது சுபகரன் சிங் என்ற விவசாயி கழுத்தில் ரப்பர் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தார். ஒன்றிய அரசைக் கண்டித்து போராடி வரும் விவசாயிகள் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிய அரசு நிறைவேற்றாத 12 கோரிக்கையை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியை நோக்கி கடந்த வாரம் முத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. எனவே இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக, சாலைகளில் ஆணிகள், முள் வேலி தடுப்பு, கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறை கலைக்க முயற்சித்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத விவசாயிகள் இன்றும் புல்டோசர்களுடன் டெல்லி நோக்கி வந்த விவசாயிகளை தடுப்புகளை தகர்த்து எரிந்துவிட்டு செல்ல முயற்பட்டனர். அப்போது மீண்டும் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்கல் நடத்தப்பட்டது.
இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயதே ஆன சுபகரன் சிங் என்ற விவசாயி கழுத்தில் ரப்பர் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தார். ஒன்றிய அரசைக் கண்டித்து போராடி வரும் விவசாயிகள் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் சோகத்திற்குரிய ஒன்றாக உள்ளது.
The post டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயதே ஆன விவசாயி உயிரிழப்பு! appeared first on Dinakaran.