ஆழ்கடலில் காணாமல் போன சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்: மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச்சென்ற போது மாயம்… தேடுதல் பணிகள் தீவிரம்..!!

வாஷிங்டன்: அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண சென்று ஆழ்கடலில் காணாமல் போன சுற்றுலாப்பயணிகளை அமெரிக்கா மற்றும் கனடா கப்பற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவில் 2,200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டைட்டானிக் சொகுசு கப்பல், அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி மூழ்கியது. இந்த விபத்தில் 1600 பேர் பலியாகினர். 1985ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இருந்து 650 கிலோ மீட்டர் தென்கிழக்கே, நியூ பவுன்ட்லாண்ட் தீவு அருகே 4 கிலோ மீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சிறிய வகை நீர்மூழ்கி கப்பலில் சென்று சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் டைட்டானிக்கை பார்வையிட கடந்த ஞாயிறு காலை சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற டைடன் என்ற சிறிய வகை நீர்மூழ்கி கப்பல், தென்கிழக்கு கனடா கடற்கரையில் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அதனை தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் கனடாவின் கப்பற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் இருந்ததாகவும், கப்பல் 96 மணி நேரம் மூழ்கும் திறன் கொண்டதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை கூறியுள்ளது. கேப் கார்ட் கடற்பகுதிக்கு கிழக்கே 1450 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 13 ஆயிரம் அடி ஆழம் வரை கண்காணிக்கக்கூடிய சோலார் உதவிகளை அமெரிக்க கடலோர காவல்படை பயன்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த செல்வந்தர் அமீஷ் காணாமல் போன பயணிகளில் ஒருவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

The post ஆழ்கடலில் காணாமல் போன சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்: மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச்சென்ற போது மாயம்… தேடுதல் பணிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: