The post சிக்கிமில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு: வெள்ளத்தில் மாயமான 102 பேரை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
சிக்கிமில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு: வெள்ளத்தில் மாயமான 102 பேரை தேடும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிமில் நேற்று முன்தினம் நள்ளிரவு மேகவெடிப்பினால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகள், அணைகள் நிரம்பி வழிந்தன. ராணுவ முகாம் அடித்து செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். வெள்ளத்தினால் நான்கு மாவட்டங்களில் சுமார் 22034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2011 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 59 பேர் பாக்யாங்கை சேர்ந்தவர்கள். இவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது.