×
Saravana Stores

தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் எம்எல்ஏ

எடாவா: உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலை வரவேற்பதற்காக கொடியசைக்க முயன்ற பாஜ பெண் எம்எல்ஏ தண்டவாளத்தில் தவறி விழுந்தார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா – வாரணாசி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி, அகமதாபாத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலின் வழித்தடங்களில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் முக்கிய பிரமுகர்கள் ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.

எட்டாவா ரயில் நிலையத்திற்கு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிப்பதற்காக, எட்டாவா சதார் பாஜ எம்எல்ஏ சரிதா பதாரியா, அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். வந்தே பாரத் ரயில் ஹாரன் அடித்தபடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அதனை வரவேற்பதற்காக எம்எல்ஏ சரிதா பதாரியா ரயில் நிலைய நடைமேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் முண்டியடித்தனர்.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், நடைமேடையில் இருந்த எம்எல்ஏ சரிதா தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்ததால் அங்கிருந்தவர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் எம்எல்ஏவை அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் எம்எல்ஏவை மீட்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்காயம் ஏதேனும் ஏற்பட்டதா என இன்னும் உறுதியாக தெரியவில்லை.

 

The post தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Edawah ,Uttar Pradesh ,BJP ,Bharat ,Modi ,Ahmedabad ,Agra ,Varanasi, Uttar Pradesh ,
× RELATED உத்தரபிரதேசத்தில் தீர்த்தம் என...