×

ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத்,மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு

அகமதாபாத், : ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்குகள் தொடர்பாக குஜராத், மகாராஷ்டிராவில் ஒரே சமயத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. டிஜிட்டல் கைது மற்றும் பல்வேறு சைபர் குற்றங்கள் மூலம் பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டதாக மக்பூல் டாக்டர், காஷிப் டாக்டர், பாசாம் டாக்டர், மகேஷ் தேசாய், அப்துல் ரஹீம் நடா மற்றும் பலர் மீது கடந்த ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இவர்கள் அப்பாவி மக்களிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி பணம் மோசடி செய்துள்ளனர்.

அதே போல் போலீஸ் மற்றும் விசாரணை அமைப்புகளின் சார்பில் போலியான நோட்டீஸ்களை அனுப்பி பலரிடம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை அங்காடியா அல்லது ஹவாலா தரகர்களின் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுகின்றன. இதே போல் சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ.100 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்த புகார்களை தொடர்ந்து சூரத், அகமதாபாத் மற்றும் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றன.

The post ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கு குஜராத்,மகாராஷ்டிராவில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : ED ,Gujarat, Maharashtra ,Ahmedabad ,The Enforcement Directorate ,Gujarat ,Maharashtra ,Maqbool Doctor ,Dinakaran ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...