அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த முதல்வர் ஸ்டாலின், அவனிடம் தன்னை அழகாக வரைந்துள்ளாய் என பாராட்டி அந்த ஓவியத்தில் மாணவனை கைப்பேசி எண்ணுடன் கையெழுத்து போட சொல்லி பெற்றுக்கொண்டார். பின்னர் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசுகிறேன் என மாணவனிடம் கூறி சென்றார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் மாணவன் கோபிநாத்தை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதல்வரின் நேர்முக உதவியாளர், உன்னிடம் முதல்வர் பேசுகிறார் என கூறினார். பின்னர் மாணவனிடம் முதல்வர் ஸ்டாலின், ‘படம் வரைந்து கொடுத்த மாணவன் நீதானே, அந்த ஓவியத்தை வரைந்தது நீதானா, படம் வரைய முதலிலேயே கற்றுக் கொண்டாயா, ஓவியம் வரைய ஓவிய பள்ளிக்கு செல்கிறாயா’ எனக் கேட்டார்.
அதற்கு மாணவன், ‘நான் சிறு வயதிலேயே நன்றாக படம் வரைவேன் சார்’ என கூறினார். ‘எதற்காக எனது படத்தை திடீரென வரைந்தாய்’ என முதல்வர் கேட்டபோது, ‘உங்களிடம் கொடுக்க எனது அப்பா வரைய சொன்னதால் உங்களை வரைந்துள்ளேன் சார்’ என கூறினார். தொடர்ந்து முதல்வர், படம் அழகாக வரைந்துள்ளாய், மிக்க மகிழ்ச்சி, நன்றாக படிக்க வேண்டுமென மாணவனை பாராட்டி வாழ்த்தினார். தமிழக முதல்வர் மாணவனை அலைபேசியில் அழைத்து பேசியது நெல்லிக்குப்பம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் கோகுல்நாத் பள்ளியில் நடக்கும் பல்வேறு ஓவியப் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கடலூர் வந்தபோது தன்னை ஓவியமாக வரைந்துகொடுத்த மாணவனுக்கு முதல்வர் வாழ்த்து: தொலைபேசியில் அழைத்து பேச்சு appeared first on Dinakaran.