தொண்டர்களின் கூட்டத்தால் திணறிய ஊர்வலம் வண்டிக்கு வழிவிடும்படி ஒலிபெருக்கியில் பேசிய பிரேமலதா

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நல்லடக்கத்துக்காக அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க திரண்டு நின்று விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் வாகனத்துக்கு பின்னால் வேகமாக ஓடி வந்தனர். ஏராளமானோர் திரண்டு நின்றதால் வாகனம் மிக மெதுவாக சென்றது. இதனால் நல்லடக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட மாலை 4.45மணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் வாகனத்தை சுற்றி தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நிலமையை உணர்ந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஊர்வல வாகனத்தில் நின்று கொண்டு, இறுதி ஊர்வல வாகனம் செல்ல ஒத்துழைப்பு தருமாறு ஒலிபெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வாகனம் செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் சாலைகளில் தழும்பி இருந்ததால் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றது. எனவே, வாகனம் செல்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கியில் திரண்டு வந்த தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

The post தொண்டர்களின் கூட்டத்தால் திணறிய ஊர்வலம் வண்டிக்கு வழிவிடும்படி ஒலிபெருக்கியில் பேசிய பிரேமலதா appeared first on Dinakaran.

Related Stories: