×

கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: பொதுசுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. எனவே இன்புளூயன்சா போன்ற நோய் மற்றும் கடுமையான சுவாச தொற்று இருந்தால் அவர்களை தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும், உடல்நிலை சரியில்லாதவர்கள் நோய் மேலும் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பருவ காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளவும்.

காய்ச்சல் வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல், தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும், தொலைபேசி, கதவு கைப்பிடிகள், லைட் சுவிட்கள் போன்ற அனைவரும் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,Tamil Nadu ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...