×

தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை, பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2025 ஜூன் 02ம் தேதி காலை 8:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 3,961 -ஆக உள்ளது. 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 02-ம் தேதி வரை மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவரல் சற்று அதிகரித்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் கூறுகையில்: தற்போது பரவிவரும் கொரோனா வீரியம் இல்லாதவை, எனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

The post தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை, பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ambil Mahesh ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh ,India ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்