கோவளம் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கோவளம் ஊராட்சியில் புனித சூசையப்பர் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், புதிய சாலை அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு கோவளம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய சாலை அமைக்க திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்து 58 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்த சாலை பணிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆதிலட்சுமி பெருமாள் அனைவரையும் வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் முன்னிலை வகித்தார். இதில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்துகொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

The post கோவளம் ஊராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: