காங்கிரஸ் தலைவர் அழகிரி பேச்சு கொள்கையில் உறுதியாக இருந்தவர் கலைஞர்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: திருக்குறளுக்கான மகத்துவதை பலர் கூறி இருந்தாலும் கலைஞர் குரல் ஒவியம் எழுதிய பிறகு தான் திருக்குறளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. திருக்குறள் என்றால் கலைஞர், கலைஞர் என்றால் திருக்குறள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கலைஞர் எளிமையானவர், அவருக்கு பல்வேறு உயர்வுகள் இருந்தும் கூட தலையாய உயர்வு என்பது ஒரு எளிய மனிதராக வந்து ஒரு மாபெரும் மனிதராக மாறியது தான் பரிமான வளச்சி, கலைஞர் கொள்கை சார்ந்த ஒரு நபர், கொள்கை மீது உறுதியாக இருக்க கூடியவர் சில நேரங்களில் முரண்பாடுகள் வந்தாலும் அதனை சாதுர்யமாக கையாள கூடிய ஒரு அற்புதமான தலைவர், தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் கொள்கை சார்ந்த தலைவராக இந்த நூற்றாண்டில் இருப்பது யாராலும் மறுக்க முடியாது.

அவருக்கு பின்னடைவு வரும் பொழுது எல்லாம் உறுதி உடன் இருந்தார். சோதனை வரும் பொழுது எல்லாம் அதை ஏற்றுக்கொண்டு அதைனை வெற்றி பெறுவதற்கு அவர் போராடினார். அதற்காக ஒரு இயக்கத்தை உருவாகினார் அந்த இயக்கம் அவருக்கு உறுதுணையாக உள்ளது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் அவருக்கும் அந்த சிறப்பு உண்டு. மாநில முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசு உடன் அவர் தோழமை போடுகிறார், அதே நேரத்தில் தன் கொள்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமன்றதில் உறுதியாக இருக்கிறார்.

மோடியால் கொண்டு வந்த 3 திட்டங்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது ஒரு பேராண்மை உள்ள அரசியல் தலைவரால் மட்டுமே முடியும். அரசாங்கத்தை நடந்த வேண்டும் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும், அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது. அதற்கு முதல்வர் வளைந்து கொடுக்க வேண்டும் அவசியம் ஏற்படுகிறது, அந்த நேரத்தில் அவர் வலைந்து கொடுக்கிறார் ஆனாலும் முறிந்து போவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

The post காங்கிரஸ் தலைவர் அழகிரி பேச்சு கொள்கையில் உறுதியாக இருந்தவர் கலைஞர் appeared first on Dinakaran.

Related Stories: