×

காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செங்கல்பட்டு: மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. செங்கல்பட்டு நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் நினைவு நாளையொட்டி‌ பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கும், செங்கல்பட்டு நகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி‌ மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிவா, குமரவேல், ரியாஸ், மனோகர், ராமச்சந்திரன், செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Congress party ,Gandhi ,Chengalpattu ,Mahatma Gandhi ,Kamaraj Memorial Day ,Dinakaran ,
× RELATED தணிக்கை சான்றிதழ் வழங்கும்...