×

தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை: கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘திருக்குறள் வார விழா’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ” குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்!

38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் – ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இவற்றைத் ‘திருக்குறள் திருவிழா – தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா’ என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்!”என பதிவிட்டுள்ளார்.

Tags : Thirukkural Festival ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Thiruvalluvar ,Kanyakumari ,Thirukkural Week Festival ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு...