புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான உதித் ராஜ் கடந்த 17ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனை தொடர்ந்து உதித் ராஜ்க்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிகின்றது. இதுதொடர்பாக உதித் ராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.