திருமழிசை பேரூராட்சி தலைவராக வெற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஜெ.மகாதேவன் வாழ்த்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும் 3, 4, 5, 8, 10, 12 ஆகிய 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. 2வது வார்டை மதிமுகவும், 9வது வார்டை பாம.கவும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றினர். இதில், திமுக கூட்டணி 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும் அதிமுக கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு இடத்தையும், சுயேச்சையாக போட்டியிட்ட வெற்றி பெற்று பாஜவில் இணைந்தார்.

இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், திமுகவைச் சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும், ஜெ.மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 12ம் தேதி பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல் விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனளிக்காமால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 6ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற ஜெ.மகாதேவன் மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, ஆதி திராவிட நல குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய, பேரூர், வார்டு திமுக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post திருமழிசை பேரூராட்சி தலைவராக வெற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஜெ.மகாதேவன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: