அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரலில் ரூ.30.50, மே- ரூ.19, ஜூன் ரூ.70.05 என விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.31 குறைக்கப்பட்டது. நடப்பாண்டு கடந்த 4 மாதமாக வர்த்தக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.1,809.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,758 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.155.55 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், இவ்விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தொடர்ந்து 4வது மாதமாக சரிந்தது வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.