×

அரசு கலைக்கல்லூரி முன்பு புகையிலை பொருட்கள் விற்க தடை விதித்து மஞ்சள் கோடு

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் நுழைவு பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடைவிதித்து, மஞ்சள் கோடு போடப்பட்டது.
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரியின் முன்புறம் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளன. இருந்த போதிலும் கல்லூரியின் முன்புற வாயில் பகுதியில் இருந்து 300 அடி தொலைவுக்கு சிகரெட், பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து கல்லூரி வாசலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு மஞ்சள் கோடு வரையப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தடையை மீறி இங்குள்ள கடைகளின் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் காவல் துறையில் புகார் செய்யப்படும் எனவும் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தெரிவித்துள்ளார். மஞ்சள் கோடு வரையும் நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

The post அரசு கலைக்கல்லூரி முன்பு புகையிலை பொருட்கள் விற்க தடை விதித்து மஞ்சள் கோடு appeared first on Dinakaran.

Tags : Government Arts College ,Kumarapalayam ,Kumarapalayam Government Arts and Science College ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...