×

சமவெளி மண்டிகளில் நல்ல விலை கிடைப்பதால் கோத்தகிரியில் கேரட் அறுவடை

 

கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால நிலைக்கு ஏற்றவாறு கேரட் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மலை காய்கறிகளான முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் புயல் காரணமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது விவசாயத்திற்கு ஏற்றவாறு பூமி ஈரப்பதம் அடைந்துள்ளது.

இதனால் கூக்கல் தொரை, மசகல், கேர்க்கம்பை, காவிலோரை, குருகத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் கேரட் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சமவெளிப் பகுதிகளில் உள்ள காய்கறி மண்டிகளில் கேரட்டிற்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், ஏற்கனவே கேரட் பயிரிட்ட விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kotagiri ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...