கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் : கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் செயல்படுகிறது.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த அலுவலகங்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதி வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது.
இவை, கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்து செல்லும் அனைத்து தரப்பினர்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது. கரூர் மாவட்டத்தில் தெரு நாய்களால் பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதனை குக செய்து கட்டுப்படுத்திட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட துறையினர் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், தினமும் கலெக்டர் அலுவலக வளாகம் மட்டுமின்றி, மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித்திரிந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் தற்போது தெரு நாய்களை கட்டுபபடுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பணிகளை விரைந்து மேற்கொண்டு, தெரு நாய்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்திட வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Related Stories: