சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!!

கன்னியாகுமரி: சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ் பெற்ற மலர்சந்தைகளில் மிக முக்கியமானது கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தை. இந்த மலர்சந்தைக்கு தமிழ்நாட்டில் மதுரை, ராயக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்தும் உள்ளூர் பகுதிகளுமான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியிலிருந்தும் பூக்கள் வந்து சேரும். அதே போல் இங்கிருந்து கேரளாவுக்கு அதிகமாக பூக்கள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்த நிலையில் நாளை சித்திரை பிறப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500ஆக விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தாழம்பூ, செவ்வந்திப் பூ விலை மூன்று மடங்கு உயர்வு

ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு தாழம்பூ தற்போது ரூ.500-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ செவ்வந்திப் பூ தற்போது மூன்று மடங்கு விலை அதிகரித்து ரூ.450-க்கு விற்பனையாகிறது. அரளிப்பூ கிலோ ரூ.200-லிருந்து ரூ.350ஆகவும், மஞ்சள் கேந்தி ரூ.70-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

 

The post சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: