“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சந்திரபோஸ். இவரது மனைவி சுமதி. 100 நாள் வேலை திட்ட பணியாளர். இவர்களது 3வது மகன் பார்த்தசாரதி(18). அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்த இவர், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி பெற்று ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களில், முதன்முதலில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் பயிலும் முதல் மாணவர் பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

“என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலை ஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,

உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
#நான்_முதல்வன் என்று
இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: