×

12 கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வரும் 22, 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பவர் களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்து.

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டனர்.

The post 12 கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,Delhi ,Secretariat ,Archana Patnaik… ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...