×

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

 

ஈரோடு, ஏப். 23: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி 25வது வார்டு கமலா நகரில் நேற்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், கவுன்சிலர் ரவி, பகுதி செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Erode ,Tamil Nadu ,M. K. Stalin ,DMK South District ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்