- சத்தீஸ்கர்
- மிசோரம் சட்டசபை தேர்தல்
- மிசோரம்
- மிசோரம் சட்டமன்றம்
- ராஜஸ்தான்
- மத்தியப் பிரதேசம்
- தெலுங்கானா
- சட்டசபை தேர்தல்
மிசோரம்: சட்டீஸ்கரில் முதல் கட்ட தேர்தல், மிசோரம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் 7ம் தேதி தொடங்கி, வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து டிச. 3ம் தேதி 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் எந்த கட்சி, எந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் அல்லது தக்கவைக்கும் என்பது தெரிந்துவிடும்.
சட்டீஸ்கரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மிசோரமில் மட்டும் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரச்சாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா மறுத்திருந்தார்.
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களானது, அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதி போட்டி என்பதால், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும், சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதியில் முதற்கட்டமாக 20 தொகுதிக்கும் நாளை மறுநாள் (நவ. 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
The post சட்டீஸ்கரில் முதல் கட்ட தேர்தல், மிசோரம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு appeared first on Dinakaran.