×
Saravana Stores

சென்னை கடற்கரை – தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்கள் அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் வெளியான அறிக்கையில்;

*அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

* மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.

* பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள். டிவி சேனல்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

* மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

* கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

* பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை – தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Coast ,Southern Railway ,Thambaram-Chengalpattu ,Chennai ,Chennai Suburban ,Chennai Coast — Southern Railway ,Thambaram- ,Chengalpattu ,
× RELATED புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி...