சென்னை: சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்தது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவில் பபட்லா என்ற இடத்தில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை அமிலம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 மணி வேகத்தில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடலில் ஆந்திர பிரதேசத்தில் அதேபோன்று வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது.
நெல்லூருக்கு 170 கி.மீ. தென் கிழக்கிலும், அதே போன்று பப்படலாவிற்கு 300 கி.மீ. தெற்கு தென் கிழக்கிலும் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடதமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி புயல் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்தது appeared first on Dinakaran.