சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் (05-12-2023, செவ்வாய்) பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்கள் நாளை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக வலுவடைந்தது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவில் பபட்லா என்ற இடத்தில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் (05-12-2023, செவ்வாய்) பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்கள் நாளை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும், அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை எனவும் வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், குடிநீர், மின்விநியோகம், உணவகங்கள், போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மகாலட்சுமி நகர் தெருக்களில் சுமார் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் படகு மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் (05-12-2023, செவ்வாய்) பொது விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.