சென்னை புறநகர் பகுதிகளில் மெட்ரோ 2-ம் கட்டப்பணிகள்: சாலைகள் குறுகி விபத்துகள் நேரிடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் பரங்கிமலை முதல் மேடவாக்கம் வரை நடைபெற்று வரக்கூடிய மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் குறுகி சேதமடைந்து தொடர் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய முறையில் சாலைகளை சீரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் புறநகர் பகுதியான பரங்கிமலை முதல் மேடவாக்கம் கூட்டுரோடு வரை 11 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத தூண்களை அமைப்பதற்காக சாலைகளை துளையிட்டு கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் வழக்கமாக பயன்படுத்தும் பாதையின் அளவு குறுகி இருப்பதோடு சாலைகளில் மேடு. பள்ளங்கள் உருவாகி மக்கள் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். கோவிலம்பாக்கத்தை சேர்ந்த லிம்ரோஸ்ரீ என்ற மாணவி தாயாருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். எனவே சாலைகளை உரிய முறையில் பராமரித்து கனரக வாகனங்களுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சென்னை புறநகர் பகுதிகளில் மெட்ரோ 2-ம் கட்டப்பணிகள்: சாலைகள் குறுகி விபத்துகள் நேரிடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: