சென்னையில் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை சைதாபேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் சுமார் 1லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.44.5கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிட மாணவர் விடுதி கட்டிடதிற்கு தற்போது அடிக்கல் நாட்டபட்டுள்ளது.

1961-ம் ஆண்டு இந்த விடுதி கட்டபட்டது. இதுவரை சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி உயர்கல்வி பயின்றுள்ளனர். இந்த நிலையில் மேற்கொண்டு மாணவர்கள் பயனடைய கூடிய சூழலில் ரூ.44.5கோடி செலவில் புதிதாக 10 தளங்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிட மாணவர் நல விடுதி கட்ட திட்டமிடபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொதுபணிதுறை அமைச்சர் எ.வ வேலு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டர்.

கூடுதலான இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் போது மேலும் ஓவ்வொரு ஆண்டும் ஆயிரக்கான மாணவர்கள் பயனடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன், உயர்கல்வி வாய்ப்பும் உண்டாகும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post சென்னையில் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: