தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக சென்னையில் ஒரு வாரத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது: மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, பெட்ரோல் குண்டு வீச்சு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 9 ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, தி.நகரில் ரூ.20 கோடி பங்களா வீட்டை போலி பத்திரம் மூலம் அபகரித்த பிரபல சினிமா பைனான்சியர் ககன்சந்த் போத்ரா(35), ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்(42), வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட மாதவரம் பகுதியை சேர்ந்த ரூபேஷ்(26), திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த சூர்யா(22), கொலை வழக்கில் தொடர்புடைய எம்ஜிஆர்.நகரை சேர்ந்த ஆனந்தன்(எ)கருப்பு ஆனந்த்(41), பிரகாஷ்(33), வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராகேஷ்(எ)ராக்கி(25),

கஞ்சா விற்பனை செய்து வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த நவீன்(எ)டியூக் நவீன்(22), ஆனந்த்(30), விஜய்(எ)லொட்டை விஜய்(26), புழல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வீராபுரத்தை சேர்ந்த அருண்(24), பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த லெவியார் பென்னியமான்(23), சூளைமேடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்(எ)கருவாடு ரஞ்சித்(27), திருட்டு வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்திக்(எ)மொட்டை கார்த்திக்(24), வழிப்பறியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த சரவணன்(22), பிராட்வே பகுதியை சேர்ந்த வேலு(43), கொலை வழக்கில் தொடர்புடைய திருவேற்காடு பகுதியை சேர்ந்த பூபதிராஜன்(21),

வழிப்பறியில் ஈடுபட்ட தரமணியை சேர்ந்த கார்த்திக்(23), அடிதடி வழக்கில் தொடர்புடைய கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பரத்(எ)பரத்ராஜ்(48), கொலை வழக்கில் தொடர்புடைய ஓட்டேரியை சேர்ந்த சத்யா(24), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்த இன்னாசி மோசஸ்(எ)மோசஸ்(25), வழிப்பறியில் ஈடுபட்ட காசிமேடு பகுதியை சேர்ந்த மதன்(28) என மொத்தம் 23 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக சென்னையில் ஒரு வாரத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது: மாநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: