×

எரிபொருள் தீர்ந்ததால் சென்னை விமானத்தில் திடீர் ‘மேடே’ அறிவிப்பு: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூரு: கவுகாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் இண்டிகோ ஏர்பஸ் ஏ321 சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை வந்தது. சென்னையை வந்தடைந்த விமானம் தரையிறங்க சிக்னல் கிடைக்காததால் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. ஆனால் பெங்களூரு விமானநிலையம் அருகில் சென்ற போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததை விமானி உணர்ந்தார். உடனே பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளுக்கு ‘மேடே’ என்ற அபாய அழைப்பு விடுத்தார். அவசரத்தை புரிந்து கொண்ட விமானநிலைய அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் இண்டிகோ விமானத்தை தரையிறங்க அனுமதித்தனர். இதனால் பெரும் விபத்து தவிக்கப்பட்டு பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

The post எரிபொருள் தீர்ந்ததால் சென்னை விமானத்தில் திடீர் ‘மேடே’ அறிவிப்பு: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayday ,Bengaluru ,Guwahati ,Bengaluru airport ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...