சென்னை: சென்னையில் நாளை முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன் தொடரில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த 20 இளம் வீரர்கள் “பால் பாய்ஸ்” பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹாக்கி ஆடும் போது களத்திற்கு வெளியே சிதறும் பந்துகளை உடனடியாக எடுத்து கொடுத்து ஆட்டம் தொய்வில்லாமல் செல்ல உதவுபவர்களே “பால் பாய்ஸ்” என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருப்பர். இம்முறை சென்னையில் நாடாகும் போட்டிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் 20 இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச போட்டி நடக்கும் மைதானத்தை முதல் முறையாக பார்ப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஹாக்கி விளையாட்டை கற்கும் ஆரம்பகட்ட வீரர்களாக இருந்து வரும் நிலையில் சர்தேச போட்டிகளில் “பால் பாய்ஸ்” ஆக பணியாற்றும் போது திறமையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது பயிற்சியாளர்கள் கருத்தாக இருக்கிறது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, மலேசியா, கொரியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கின்றனர்.
The post சென்னையில் நாளை முதல் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: “பால் பாய்ஸ்” பணிக்கு எஸ்.டி.ஏ.டி வீரர்கள் 20 பேர் தேர்வு appeared first on Dinakaran.