×

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகுந்த நல்லபாம்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காவல்நிலையத்துக்குள் நேற்றிரவு 10 மணியளவில் இரையை தேடி 8 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. 2 மணி நேர போராட்டத்துக்கு பின் அந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு நகர காவல்நிலைய வளாகத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இரையை தேடி 8 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இச்சமயத்தில் காவல் நிலையத்தில் அந்த நல்லபாம்புக்கு இரையாக ஒரு தவளை கிடைத்தது. அந்த தவளையை வாயில் கவ்வியபடி, காவல்நிலைய வளாகத்தில் தனக்கு தோதான இடம் தேடி நல்லபாம்பு ஊர்ந்தபடி சென்றது. பின்னர் அங்கு நின்றிருந்த வாகனங்களுக்கு இடையே, வாயில் கவ்விய தவளையை நல்லபாம்பு விழுங்கத் துவங்கியது.

அந்த நல்லபாம்பை தொந்தரவு செய்யாமல், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர்கள், அவற்றை தங்களின் செல்போனில் வீடியோவாகப் படம்பிடித்து, பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். இதனால் அந்த வீடியோ வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் நல்லபாம்பைத் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காவல்நிலைய மதில்சுவர் ஓட்டையில் பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள நல்லபாம்பை நீண்ட கம்பி மூலமாக தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த நல்லபாம்பை செங்கல்பட்டு வனப்பகுதி மலைக்காட்டில் கொண்டு விட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகுந்த நல்லபாம்பு appeared first on Dinakaran.

Tags : Nallapambu ,Chengalpattu city police station ,Chengalpattu ,police station ,Nallabambu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...