சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தடம் புரண்ட 9 சரக்கு ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம்புரண்டது. ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து, 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. விபத்துக்குள்ளான 9 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்ட நிலையில் தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
The post செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தடம் புரண்ட 9 சரக்கு ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக அகற்றம் appeared first on Dinakaran.