கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக அப்பள்ளியின் வாகனங்கள், அறைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தனர்.

இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவி ஸ்ரீமதி கொலைக்கான எந்த காரணமும் இல்லை, தற்கொலைக்கான முகாந்தாரமே உள்ளது என குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: