சென்னையில் 4வது நாளாக ரயில் சேவை மாற்றம்

சென்னை: சென்னையில் 4வது நாளாக இன்றும் ரயில் சேவை மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக கடற்கரையில் இருந்து பகல் 2.15 மணிக்கு புறப்படும். கோவை சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயில் காட்பாடி வரையே இயக்கப்படும். மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியில் இருந்து பகல் 2.35 மணிக்கு கிளம்பும். கோயம்புத்தூரிலிருந்து சென்னை வரும் கோவை, சதாப்தி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை -அகமதாபாத் (12656) நவஜீவன் விரைவு ரயில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும் நவஜீவன் விரைவு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

விஜயவாடாவிலிருந்து சென்னை வரும் வந்தேபாரத் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும். டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில் திருத்தணியிலும் நிறுத்தப்படும். சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய 7 ரயில்கள் திருத்தணி மற்றும் சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் துறையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடற்கரையில் இருந்தும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 4வது நாளாக ரயில் சேவை மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: