×

திருப்பதி கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர்களின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சென்னை பக்தர்களின் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையை சேர்ந்த பக்தர்கள் ஒரு காரில் திருப்பதி நோக்கி வந்தனர். திருப்பதி பத்மாவதிபுரம் அருகே கார் வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காரில் பயணம் செய்தவர்கள், உடனே கீழே இறங்கினர்.

சில நொடிகளில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி முழுவதும் பரவியது. இதனை பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையில் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

The post திருப்பதி கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர்களின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupati temple ,Tirumalai ,Tirupati Ezhumalaiyan temple ,Tirupati ,Swami ,Tirupati Padmavathipuram ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...