×

கேப்டனை விட ஒரு தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன்: சூர்யகுமார் யாதவ் பேட்டி

பல்லகெலே: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவுபல்லகெலே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில்9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கில் 39, ரியான் பராக் 26, ஷாஷிங்டன் சுந்தர் 25 ரன் எடுத்தனர். இலங்கை பவுலிங்கில் தீக்‌ஷனா 3விக்கெட் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய இலங்கை முதல் விக்கெட்டிற்கு 58 ரன் சேர்த்தது. குசால்பெரேரா 46,குசால் மெண்டிஸ் 43, பதும் நிசங்கா 26 ரன் எடுக்க மற்றவர்கள் சொதப்பினர். 20ஓவரில் அந்த அணி 8விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுக்க ஆட்டம் டை ஆனது.

கடைசி 2 ஓவரில் 9 ரன் மட்டுமே தேவைப்பட 19வது ஓவரை வீசிய ரிங்கு சிங் 3 ரன்கொடுத்து 2 விக்கெட்டும், கடைசி ஓவரில் சூர்யா5 ரன்கொடுத்து 2 விக்கெட்டும் எடுத்தனர். சூப்பர் ஓவரில் வாஷிங்டன் 4 பந்தில் 2 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் சூர்யா முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றிபெற்றது. இந்தவெற்றி மூலம் 3-1 என தொடரை கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. சூர்யகுமார்தொடர் நாயகன்விருதும், வாஷிங்டன் ஆட்டநாயகன் விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், நாங்கள் வீசிய கடைசி 2 ஓவரை காட்டிலும், பேட்டிங்கில் 48 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த போது, ஒவ்வொரு வீரரும் நம்பிக்கையுடன் விளையாடினர்.

அதுதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிட்சில் 140 ரன் தான் சராசரி ஸ்கோராக உள்ளது. இதனால் அந்த ஸ்கோரை நோக்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதுபோன்ற போட்டிகளை ஏராளமான முறை நான் பார்த்திருக்கிறேன். அப்போது சக வீரர்களிடம் நம்பிக்கையுடன் விளையாடினால், நிச்சயம் வெல்வோம் என்றே கூறினேன். இந்த அணியின் பெஞ்ச் வலிமை மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் கேப்டனாக விரும்பியதில்லை. ஒரு தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post கேப்டனை விட ஒரு தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன்: சூர்யகுமார் யாதவ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : SURYAKUMAR YADAV ,Pallakele ,T20 ,India ,Sri Lanka ,Rauballakele Stadium ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவுடன் 2வது டி20 இங்கிலாந்து பதிலடி: லிவிங்ஸ்டன் அமர்க்களம்