நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் நாளைமுதல் கையெழுத்து இயக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி நாளை முதல் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளை­ஞர் அணி-மாண­வர் அணி, மருத்­து­வர் அணி மாவட்ட, மாந­கர அமைப்­பா­ளர்­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இதில் கலந்து கொண்டு திமுக இளை­ஞர் அணி செய­லா­ள­ரும் அமைச்­ச­ரு­மான உத­ய­நிதிஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் ‘நீட் தேர்­வுக்கு எதி­ரான தமிழ்­நாட்டு மக்­க­ளின் மன­நிலை நீர்த்­துப்­போ­க­ வில்லை. அந்த எதிர்ப்பு அப்­ப­டியே இருக்­கி­றது’ என்­பதை ஒன்­றிய அர­சுக்கு உணர்த்­தும் வகை­யில், அந்­தப் உண்­ணா­வி­ரத அறப்­போ­ராட்­டம் அமைந்­தி­ருந்­தது. அதற்­கான முன்­னெ­டுப்­பா­கத்­தான் வரு­கின்ற 21ம் தேதி(நாளை) கையெ­ழுத்து இயக்­கத்தை நாம் தொடங்­க­வுள்­ளோம்.

50 நாட்­க­ளில் 50 லட்­சம் கையெ­ழுத்­து­க­ளைப் பெறும் வகை­யில் தமிழ்­நாட்டு மக்­க­ளின் மன­நி­லையை இந்­திய ஒன்­றி­யத்­துக்கு உணர்த்­தும் வகை­யில் இந்­தக் கையெ­ழுத்து இயக்­கம் இருக்க வேண்­டும். மக்­க­ளின் கையெ­ழுத்­து­க­ளைப் பெறு­வ­தற்­கா­கப் போஸ்ட் கார்ட் மற்­றும் இணை­ய­த­ளம் பிரத்யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. போஸ்ட் கார்டு என்­பது ஓர் அடை­யா­ளத்­துக்­குத்­தான். அனை­வ­ரின் கையெ­ழுத்­தை­யும் டிஜிட்­ட­லா­கப் பெற வேண்­டும் என்­ப­து­தான் நம்­மு­டைய முழு இலக்கு. 50 நாட்­க­ளில் பெறப்­ப­டும் கையெ­ழுத்­து­களை முத­ல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்­தில் நடை­பெற உள்ள இளை­ஞர்அணி­யின் மாநாட்­டில் அவர்­க­ளு­டைய கையில் ஒப்­ப­டைக்­கப்­ப­டும்.

பிறகு முறைப்­படி அறி­வா­ல­யத்­தின் வழி­யாக, அவை குடி­ய­ர­சுத் தலை­வருக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டும். மாநாட்­டுக்கு இன்­றி­லி­ருந்து சரி­யாக இன்­னும் 59 நாட்­களே உள்­ளன. 50 நாட்­க­ளில் 50 லட்­சம் கையெ­ழுத்­து­கள் என்று இலக்கு வைத்­துள்­ளோம். கையெ­ழுத்­துப் பெறும்­போது எதற்­காக இந்­தக் கையெ­ழுத்­துப் பெறு­கி­றோம் என்­ப­தைப் பொது­மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­ல­வும். தேவை­யெ­னில், நீட் தேர்வை ரத்து செய்­ய­வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்த துண்­ட­றிக்­கை­களைவிநி­யோ­கம் செய்­தும் கையெ­ழுத்­துப் பெற­லாம்.

இவை தவி­ரக் கல்­லூ­ரி­க­ளுக்கு முன்பு மாண­வர்­க­ளின் கையெ­ழுத்­து­க­ளைப் பெற­லாம். அது இந்த இயக்­கத்தை இன்­னும் மக்­க­ளி­டம் நெருக்­க­மா­கக் கொண்­டு­போய்ச் சேர்க்க உத­வும். திரு­மண மண்­ட­பம் போன்ற இடங்­களை முன்­ப­திவு செய்து, பொது­மக்­களை, மாண­வர்­களை அழைப்­பது போன்ற பணி­களை இப்­போ­தி­லி­ருந்தே தொடங்­கு­மாறு நான் கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போல் 72 மாவட்­டங்­க­ளில் சென்­னை­யில் உள்ள 6 மாவட்­டங்­க­ளுக்­கும் சேர்த்து, கலை­வா­ணர் அரங்­கில் இந்த நிகழ்ச்சி நடை­பெ­று­கின்­றது. இது தவிர, மீதி 66 மாவட்­டங்­க­ளுக்­கும் தனித்­த­னி­யாக இந்­தக் கையெ­ழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடை­பெற உள்­ளது. இந்­தக் கையெ­ழுத்து இயக்­கத்தை வெற்­றி­க­ர­மாக முடிக்க ஒத்­து­ழைப்­புத் தர வேண்டும். இவ்­வாறு அவர் பேசினார்.

The post நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் நாளைமுதல் கையெழுத்து இயக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: