அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பிய விவகாரம் மோடி சொல்வதை கேட்டு செயல்படுகிறார் தமிழக கவர்னர்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பிய விஷயத்தில், தமிழக கவர்னர் ரவி, மோடி சொல்வதை கேட்டு செயல்படுகிறார். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் முதலமைச்சர் அனுப்பி உள்ள அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பி விட்டார். அவர் அதை ஏற்றுக் கொண்டால் தான் ஆச்சரியமே தவிர, திருப்பி அனுப்பியதில் ஆச்சரியம் இல்லை. அவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தவர் மோடி. அவர் சொல்லி அனுப்பியபடி இவர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். எனவே அம்பை எய்தவர்களை தான் நாம் நோக வேண்டும். அம்பை நோக்கி, வருத்தப்படுவதில் பலன் இல்லை. இந்தியாவில் கூட்டாட்சி முறை செயல்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு அமைச்சர்களை மாற்ற, நியமிக்க அதிகாரம் உள்ளது. ஒரு மரபுக்காக தான் கவர்னர் கையெழுத்து. கவர்னர் இதைப்போல் செய்தால், இனிமேல் கவர்னர் ஒப்புதல் இல்லாமல் முதலமைச்சர் நியமித்துக் கொள்ளலாம். கவர்னர் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், முதலமைச்சரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

The post அமைச்சரவை பரிந்துரையை திருப்பி அனுப்பிய விவகாரம் மோடி சொல்வதை கேட்டு செயல்படுகிறார் தமிழக கவர்னர்: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: