பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

* எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, சென்னையில் 2 இடங்களில் நடந்தது

சென்னை: பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர். சென்னையில் 2 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை இருந்தது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த 2 தொடர் இயற்கை பேரிடர் இழப்புகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை கிழக்கு மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை தாங்கினார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம், மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், இ.பரந்தாமன், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், வர்த்தகர் அணி இணைச்செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம், ந.மனோகரன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஏமாற்­றாதே! ஏமாற்­றாதே! தமிழ்­நாட்டை ஏமாற்­றாதே!. நிதி எங்கே? நிதி எங்கே? எங்­க­ளுக்­கான நிதி எங்கே?. நீதி­வேண்­டும்! நீதி­வேண்­டும்! தமிழ்­நாட்­டுக்கு ­நீ­தி­வேண்­டும்! தடுக்­காதே! தடுக்­காதே! தமிழ்­நாட்டு வளர்ச்­சியை தடுக்­காதே! இன்­னும் வரல… இன்­னும் வரல… பேரி­டர் நிதி இன்­னும் வரல! காண­வில்லை… காண­வில்லை… எய்ம்ஸை இன்­ன­மும் காண­வில்லை. என்ன ஆச்சு… என்ன ஆச்சு… மெட்ரோ நிதி என்ன ஆச்சு…? எங்க போச்சு… எங்க போச்சு… எங்க வரிப்­ப­ணம் எல்­லாம் எங்­க­ போச்சு? ஏமாற்­றாதே… ஏமாற்­றாதே… வஞ்­சிக்­காதே… வஞ்­சிக்­காதே.. தமிழ்­நாட்டை இனி­யும்வஞ்­சிக்­காதே..

வரி என்­றால் இனிக்­குது… நிதி என்­றால் கசக்­குதா? ஒன்­றிய அரசே… ஒன்­றிய அரசே… தமி­ழர் நாங்­கள் இந்­தி­யர்­கள் இல்­லையா? தமிழ்­நாடு இது தமிழ்­நாடு… சுய­ம­ரி­யாதை­யுள்ள தமிழ்­நாடு…கேடு! கேடு! பாஜ நாட்­டுக்கே கேடு! பழி­வாங்­காதே… பழி­வாங்­காதே… தமிழ்­நாட்டு மக்­களை பழி­வாங்­காதே… ஒதுக்­கிடு… ஒதுக்­கிடு… தமிழ்­நாட்­டுக்கு நிதி ஒதுக்­கிடு…வரி வாங்க தெரி­யுது நிதி கொடுக்க தெரி­யாதா? டெல்­லி­யில் கிண்­டிய அல்­வாவை தமிழ்­நாட்­டுக்கு ஊட்­டாதே! வரி­ய­ நாங்க கோடி­கோ­டி­யா­ கொ­டுக்­கி­றோம்…

நிதி­யை முட்டை­யா­ தான் த­ரு­வீங்­களா? ஆர்ப்­பாட்­டம் இது ஆர்ப்­பாட்­டம்! ஒன்­றிய அர­சைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டம்! பாசிச பாஜ அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! என்று கோஷம் எழுப்பினர். சென்னை சைதாப்பேட்டை வேளச்சேரி சாலையில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, நே.சிற்றரசு முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, காரம்பாக்கம் கணபதி, டாக்டர் எழிலன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மா.பா.அன்புதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், தென்மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரிதா தங்கம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லயன் பி.சக்திவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆவடி நாசர், திருத்தணி சந்திரன் மற்றும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: