×

திடீரென பிரேக் போட்ட வீடியோ சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்கின் ரோபோ டாக்சி

நியூயார்க்: எலான் மஸ்கின் தானியங்கி ரோபோ டாக்சி, திடீரென பிரேக் போட்ட வீடியோ, தவறான பாதையில் செல்லும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் ரோபோ டாக்சியை ஞாயிறன்று அறிமுகம் செய்தார். ரோபோ டாக்சியின் சோதனை ஓட்டம் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது.

டெஸ்லாவின் ரோபோ டாக்சியினால் பயணிகள் பெரும்பாலானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவீதம் உயர்ந்தது. இந்நிலையில் சாலையில் ரோபோ டாக்சியின் செயல்பாடு குறித்த பல்வேறு வீடியோக்களை பொதுமக்கள் வைரலாக்கி வருகிறார்கள். ரோபோ டாக்சி சூப்பராக இயங்கும் பல வீடியோக்கள் வைரலாகி உள்ளது. இதேபோல் ரோபா டாக்சி செய்யும் தவறுகள் குறித்த வீடியோக்களும் கவனம் பெற்றுள்ளன.

சாலையில் ரோபோ டாக்சி திடீரென பிரேக் போடுவது மற்றும் எதிர்வாகனங்கள் வரும் சாலையில் சென்று பின்னர் திரும்புவது போன்ற வீடியோக்களும் வெளியாகி உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் இந்த வீடியோக்களை ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து டெஸ்லாவிடம் ரோபோ டாக்சி இயக்கத்தின்போது ஏற்பட்ட தவறுகள் பற்றிய தகவல்களை கேட்டுள்ளது.

The post திடீரென பிரேக் போட்ட வீடியோ சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்கின் ரோபோ டாக்சி appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,New York ,Tesla ,Austin, Texas, USA ,Dinakaran ,
× RELATED குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல்...