- பாஜா
- தாண்டியார்பெட்டி
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமிஷா ஏ.
- முண்டினம் வன்னார்பெட் அஞ்சல் நிலையம்
- வட்செனாய் பாஜா
- ஜனாதிபதி
- நாகராஜ்
- தின மலர்
தண்டையார்பேட்டை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆ.ராசா எம்பி விமர்சித்து பேசியதாகக் கூறி, வடசென்னை பாஜ சார்பில் நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தண்டையார்பேட்டை போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜ மாவட்ட தலைவர் நாகராஜ் உள்பட 135 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அனுமதியின்றி பாஜ ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் உள்பட 135 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
