இந்நிலையில், பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்துள்ளனர். எங்களையும் அழைத்துள்ளனர். தொகுதி பங்கீட்டிற்கு பிறகு அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தும். பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும். அனைத்து கட்சிகளுடனும் இன்று மாலை தொகுதி பங்கீடு முடிவாகி கையெழுத்தாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
The post பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும்: ஏ.சி.சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.