பைக்குகள் மோதல் 3 பேர் பரிதாப பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் அருண்குமார் (16). பிளஸ் 2 படித்து வந்தார். மகள் வைஷ்ணவி (21). எம்ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அருண்குமார் தனது அக்கா வைஷ்ணவியை பல்கலைக்கழகத்திற்கு பைக்கில் அழைத்து சென்றார். வாணாபாடி- செட்டித்தாங்கல் சாலையில் தனியார் பேப்ரிகேஷன் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரே பைக்கில் சோளிங்கர் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்த லாலாபேட்டை சரத்பாபு(28), கோபால்(45), பெல் ஆன்சிலரி மலைமேடு ஆனந்த்(25) ஆகியோர் மீது இவர்களது பைக் நேருக்குநேர் மோதியது. இதில், 5 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில், படுகாயம் அடைந்த தொழிலாளிகள் சரத்பாபு, கோபால் மற்றும் பள்ளி மாணவன் அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கல்லூரி மாணவி வைஷ்ணவி மற்றும் தொழிலாளி ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

The post பைக்குகள் மோதல் 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: