×

பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்: பள்ளி முதல்வர் ஜாமினை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் சரணடையும் நாளில் ஜாமின் மனுக்களை பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமின் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

The post பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்: பள்ளி முதல்வர் ஜாமினை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Coimbatore Principal Sessions Court ,Coimbatore.… ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்