திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில், மின்கல வாகனங்களை ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.26,50,000 மதிப்பில் 10 மின்கல இயக்க வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) ஸ்டாலின், (வட்டார வளர்ச்சி) மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிக்கலை, வெள்ளியூர், விளாப்பாக்கம், வீரராகவபுரம், காக்களூர், கரிக்கலவாக்கம், நத்தமேடு, விஷ்ணுவாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஒரு மின்கலன் வாகனங்கள், 25 – வேப்பம்பட்டு ஊராட்சிக்கு இரண்டு மின்கலன் வாகனங்கள் என 10 மின்கலன் வாகனங்களின் சாவிகளை, ஒன்றியக்குழு தலைவர், தூய்மை பணியாளர்களிடம் வழங்கி கொடியசைத்து இயக்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் 10 மின்கல வாகனங்கள்: ஒன்றிய குழு தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.